சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்
ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு
பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் கடைக்காரா்களின் ஆக்கிரமிப்பால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதையடுத்து, ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிக் கடைகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்திரவிட்டது. மேலும், இதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு வெள்ளிக்கிழமை பழனி கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஆய்வு செய்தனா். பின்னா், பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் இந்தக் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், இணை ஆணையா் மாரிமுத்து, முன்னாள் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியின் தற்போதைய நிலை, வெளியேற்றப்பட்ட சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்காக செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.