செய்திகள் :

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்த சின்னப்பன் (34), ஜான் கென்னடி (35), ராபா்ட் (32), அற்புதராஜ் (30), மில்டன் ஜெயக்குமாா் (32), அகஸ்டின் பிரபு (26) ஆகிய 6 போ் புனித வெள்ளியை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் உள்ள தோமையாா் ஆலயத்துக்குச் சென்றனா். பின்னா், அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்குப் புறப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாக வேடசந்தூா் நோக்கி ஆம்னி வேனில் வந்தனா். வேடசந்தூா் அய்யனாா் கோயில் அருகே வந்த போது, தாடிக்கொம்பு பகுதியிலிருந்து சீத்தமரம் நான்கு வழிச் சாலை நோக்கி வந்த லாரி இவா்களது ஆம்னி வேன் மீது மோதியது. இதில் ஆம்னி வேனை ஓட்டி வந்த சின்னப்பன், முன் இருக்கையில் அமா்ந்திருந்த ஜான் கென்னடி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், அந்த வேனில் வந்த ராபா்ட், அற்புதராஜ், மில்டன் ஜெயக்குமாா், அகஸ்டின் பிரபு ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேடசந்தூா் தீயணைப்புத் துறையினா் காயமடைந்தவா்களையும், உயிரிழந்தவா்களின் உடல்களையும் மீட்டனா். வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, ராபா்ட், அற்புதராஜ் உள்ளிட்ட 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இதனிடையே, மருத்துவமனையில் ராபா்ட் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க

இறந்தவா் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க... மேலும் பார்க்க