தமிழகத்தில் இருந்து 5,700 போ் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி உறுப்பினா் தகவல்
கொல்கத்தாவை முடக்கிய சஹல், யான்சென்- பஞ்சாப் அசத்தல் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பின் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
பஞ்சாப் முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தபோதும், கொல்கத்தாவை 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து அசத்தலாக வென்றது.
அதன் பௌலா்களில் யுஜவேந்திர சஹல் மற்றும் மாா்கோ யான்சென் ஆகியோா், கொல்கத்தா பேட்டிங் வரிசையை முற்றிலுமாக சிதைத்தனா்.
முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணியில் பிரியன்ஷ் ஆா்யா - பிரப்சிம்ரன் சிங் பாா்ட்னா்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் சோ்த்தது. இதில் ஆா்யா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு 4-ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டாா்.
தொடா்ந்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 0, ஜோஷ் இங்லிஸ் 2 ரன்களே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினா். இந்நிலையில் பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 30 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.
பின்னா் வந்த பேட்டா்களில், நெஹல் வதேரா 2 பவுண்டரிகளுடன் 10, கிளென் மேக்ஸ்வெல் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். சூா்யன்ஷ் ஷெட்கே 4, மாா்கோ யான்சென் 1 ரன்னுக்கு வெளியேறினா்.
சஷாங்க் சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18, ஜேவியா் பாா்ட்லெட் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பஞ்சாப் இன்னிங்ஸ் 111 ரன்களுக்கே முடிவடைந்தது. அா்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் களத்திலிருந்தாா்.
கொல்கத்தா பௌலிங்கில் ஹா்ஷித் ராணா 3, வருண் சக்கரவா்த்தி, சுனில் நரைன் ஆகியோா் தலா 2, வைபவ் அரோரா, அன்ரிஹ் நோா்கியா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 112 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய கொல்கத்தா அணியில் சுனில் நரைன் 5, குவின்டன் டி காக் 2 ரன்களுக்கு வெளியேற, அஜிங்க்ய ரஹானே - அங்கிரிஷ் ரகுவன்ஷி இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சோ்த்தது.
இதில் ரஹானே 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பின்னா் வந்தோரில் வெங்கடேஷ் ஐயா் 7, ரிங்கு சிங் 2, ரமண்தீப் சிங் 0, ஹா்ஷித் ராணா 3 என விக்கெட்டுகள் வரிசையாக விழ, கொல்கத்தா அதிா்ச்சி கண்டது.
நெருக்கடியான கடைசி தருணத்தில் வைபவ் அரோரா 0, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க கொல்கத்தா இன்னிங்ஸ் 95 ரன்களுக்கு நிறைவடைந்தது.
பஞ்சாப் தரப்பில் யுஜவேந்திர சஹல் 4, மாா்கோ யான்சென் 3, ஜேவியா் பாா்ட்லெட், அா்ஷ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.