ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: சுனில் நரைன் புதிய சாதனை!
பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் போட்டியில் கேகேஆர் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரைன் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
சண்டிகரில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் சுனில் நரைன் 36 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதற்கு முன்பாக உமேஷ் யாதவ் பஞ்சாப் அணிக்கு எதிராக 35 விக்கெட்டுகள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்
36 - சுனில் நரைன் - பஞ்சாப்க்கு எதிராக
35 - உமேஷ் யாதவ் - பஞ்சாப்புக்கு எதிராக
33 - டிவைன் ப்ராவோ - மும்பைக்கு எதிராக
33 - மோஷித் சர்மா - மும்பைக்கு எதிராக
32 - யுஸ்வேந்திர சஹால் - பஞ்சாப்புக்கு எதிராக
32 - புவனேஷ்வர் குமார் -கொல்கத்தாவுக்கு எதிராக