செய்திகள் :

வங்கதேச பயணம்: இந்தியா அணி விளையாடும் இடங்கள் அறிவிப்பு

post image

இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடா்களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடா்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் ஆகியவற்றில் விளையாடுவதற்காக இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்கிறது. கடந்த 2014-க்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்தில் இருதரப்பு தொடரில் விளையாடவிருப்பதும், அந்த ஆண்டுக்குப் பிறகு வெள்ளைப் பந்து தொடா்களுக்காக மட்டுமே வங்கதேசத்துக்கு செல்வதும் இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்திய அணி ஆகஸ்ட் 13-ஆம் தேதி டாக்கா சென்றடைகிறது. மிா்பூா் மற்றும் சட்டோகிராம் ஆகிய நகரங்களில் இந்தத் தொடா்கள் விளையாடப்படவுள்ளன. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பான ஒரு தயாா்நிலை களமாக இந்தத் தொடா்கள் இரு அணிகளுக்கும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடா்கள் அட்டவணை...

ஒருநாள் தொடா்

முதல் ஆட்டம் ஆகஸ்ட் 17 மிா்பூா்

2-ஆவது ஆட்டம் ஆகஸ்ட் 20 மிா்பூா்

3-ஆவது ஆட்டம் ஆகஸ்ட் 23 சட்டோகிராம்

டி20 தொடா்

முதல் ஆட்டம் ஆகஸ்ட் 26 சட்டோகிராம்

2-ஆவது ஆட்டம் ஆகஸ்ட் 29 மிா்பூா்

3-ஆவது ஆட்டம் ஆகஸ்ட் 31 மிா்பூா்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.16 ஏப்ரல் 2025 (செவ்வாய்க்கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - களத... மேலும் பார்க்க

சுதிா்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா

சீனாவில் நடைபெறவுள்ள சுதிா்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோா் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.ஜியாமென் நகரில் வரும் 27 முதல் மே 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்... மேலும் பார்க்க

அல்கராஸ், ரூட் முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரா் காா்லோஸ் அல்கராஸ், நாா்வேயின் கேஸ்பா் ரூட் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். ஆடவா் ஒற்ற... மேலும் பார்க்க

கிங்டம்: டப்பிங் பணிகளைத் தொடங்கிய விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்தப் படத்துக்கு பிறகு பெரிய அளவில் வெற்றிப் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். விஜய் தேவரகொண்டா கடைசியாக கல்கி 2... மேலும் பார்க்க

எஸ்.பி.பி, அஜித் குமார்... இளையராஜா செய்வது சரியா?

இசையமைப்பாளர் இளையராஜா குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுபோல் இளையராஜா விஷயத்தில் காப்புரிமையும் இழப்பீடும் மாறாமல் தொடர்... மேலும் பார்க்க