ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
கிங்டம்: டப்பிங் பணிகளைத் தொடங்கிய விஜய் தேவரகொண்டா!
நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்தப் படத்துக்கு பிறகு பெரிய அளவில் வெற்றிப் படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா கடைசியாக கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாகவும் முதல் பாதி முடிவடைந்ததாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
