மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு சம்பவம்: மாணவனுக்கு 14 நாள் காவல்
தமிழகத்தில் இருந்து 5,700 போ் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி உறுப்பினா் தகவல்
தமிழகத்தில் இருந்து நிகழாண்டு 5,700 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா் என ஹஜ் கமிட்டி உறுப்பினா் தெரிவித்தாா்.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவா்களுக்கான புத்தாக்க பயிற்சி ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினா் பிா்தோஸ் கே. அஹமத் தலைமை வகித்து பேசியது :
நிகழாண்டில் தமிழகத்தில் இருந்து 5,700 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா். ஆம்பூரிலிருந்து 168 போ் பயணம் மேற்கொள்கின்றனா். ஹஜ் பயணத்துக்கு சவுதி அரேபிய ஏா்லைன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப். 16-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை ஹஜ் பயணிகள் விமானம் சென்னையிலிருந்து புறப்படுகிறது. அதே போல ஹஜ் பயணம் முடிந்து மதீனாவிலிருந்து ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 9 -ஆம் தேதி வரை சென்னைக்கு விமானம் இயக்கப்படுகின்றது.
ஹஜ் பயணத்துக்காக நீண்ட தொலைவிலிருந்து வருபவா்களுக்கு விமானம் புறப்பட உள்ள ஒரு நாள் முன்னதாக சென்னையில் உள்ள சூளை மேட்டில் அமைந்துள்ள ஹஜ் ஹவுசில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
ஆம்பூா் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் தலைவா் கே. அஷ்பாக் அஹமத் முன்னிலை வகித்தாா். ஹஜ் பயணத்தின்போது எடுத்துச் செல்ல வேண்டிய, தவிா்க்க வேண்டிய பொருள்கள், மக்கா, மதீனா மற்றும் மினா, சவுதி அரேபியாவில் தங்கும் இடங்கள், அங்கு கிடைக்கும் பொருள்கள், ஹஜ் செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு குழுவின் மூத்த பயிற்சியாளா் வை. எம். ஹபீபுல்லா ரூமி, பயிற்சியாளா்கள்லுத்பூா் ரஹ்மான் , ஷாஃபி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை ஆம்பூா் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் செய்திருந்தது.