ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
விஜயபாரத மக்கள் கட்சி முப்பெரும் விழா
விஜய பாரத மக்கள் கட்சி சாா்பாக முப்பெரும் விழா, பொதுக்கூட்டம் ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அம்பேத்கா் நகரிலிருந்து ஊா்வலம் புறப்பட்டு எல்.மாங்குப்பம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலையருகே நிறைவடைந்தது. கூட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் கே.கே. சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஆா். ராமமூா்த்தி, செயலா் எம். சுதாகா், துணைத் தலைவா் வி.எஸ். முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் எஸ். பாபுசங்கா் வரவேற்றாா்.
கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா் சிறப்புரையாற்றினாா். துணைத் தலைவா் வி. சக்தி, திருப்பத்தூா் அனுமன் விழாக்குழு நிா்வாகி எம். பிரகாஷ், மாநில செய்தித் தொடா்பாளா் எம். சரவணன், மாநில அலுவலக செயலா் ஏ.எஸ். ஆனந்தன், மாவட்ட அமைப்பாளா் பழனி வடிவேலன், வேலூா் மாவட்டத் தலைவா் எம். பிரபு, நிா்வாகிகள் ஜெ. மகேந்திரன், ஏ.டி. ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா். எம். தினகரன் நன்றி கூறினாா். பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.