செய்திகள் :

3 ஆண்டுகள், 30 நாடுகள் பயணம்... உலகம் முழுவதும் வலம் வரும் ”பிளாஸ்டிக் ஒடிஸி” கப்பல் - பின்னணி என்ன?

post image

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பை, பாட்டில் என்று இல்லாமல் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கூட பிளாஸ்டிக் சென்றுவிட்டது. இதனை தவிர்க்க, மாசுகளை குறைக்க பல்வேறு முன்னெடுப்புகள் நடந்து வந்தாலும் மறுபுறம் இதன் பயன்பாடு குறைவதில்லை.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ”மிதக்கும் ஆய்வக கப்பல்” ஒன்று வலம் வருகிறது. பிளாஸ்டிக் ஒடிஸி என்ற அந்தக் கப்பல் தற்போது சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் என்ன? எவ்வாறு பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள், உள்ளூர் மக்களுக்கு அவர்கள் சொல்ல வருவது என்ன? என்பது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

"பிளாஸ்டிக் ஒடிஸி" (Plastic Odyssey) என்ற 40 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் ஆய்வக கப்பல், பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து உலகம் முழுவதும் அதற்கான தீர்வை கண்டறிய மூன்று ஆண்டுகள் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த உலகளாவிய பயணத்தை அக்டோபர் 1 2022 ஆண்டு பிரான்சின் தெற்கில் உள்ள மார்சேயில் இருந்து தொடங்கியது. இந்தக் கப்பல் உலகம் முழுவதும் பயணம் செய்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அதனை எப்படி பயனுள்ள வகையில் மாற்று பொருள்களாக வடிவமைக்க முடியும், பிளாஸ்டிகிற்கு மாற்று பொருட்கள் என்ன என்று உள்ளூர் மக்களிடம் காண்பிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இதுவரை 30 நாடுகள் பயணம் செய்த இந்த கப்பல் ஷாங்காங், தைவான், வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் மாற்று பொருள் குறித்தும் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தனது 31வது பயணத்தை மேற்கொண்டுள்ள பிளாஸ்டிக் ஒடிஸி கப்பல் தற்போது சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் ஒடிஸி குழு, பிளாஸ்டிக் மீதான நமது சார்பை முறியடிக்க அதற்கான மாற்று வழிகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த உலகம் முழுவதும் பயணிக்கிறது.

pic courtesy plasticodyssey org

இந்த மிதக்கும் ஆய்வக கப்பலின் உள்ளேயே பத்து இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்கின்றனர், பிளாஸ்டிக் கழிவுகளை முதலில் வகைப்படுத்துகின்றனர்.

இயந்திரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக்கை துண்டாக்கின்றன. அதன் பின்னர் சுவிங்கம் போன்ற பேஸ்ட்களை உருக்கி அதனை ஒரு மாற்றுப் பொருளாக உருவாக்குகின்றனர். இவ்வாறு உருவாக்கிய சில பொருட்கள் அந்த கப்பலிலேயே வைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளுக்கான ஓடு, தொட்டிகள், நாற்காலிகள் போன்ற கட்டுமான பொருட்களை இதன் மூலம் வடிவமைத்துள்ளனர்.

இன்னும் சிலர் இந்த பொருளைக் கொண்டு கண்ணாடி பிரேம்களை வடிவமைக்கவும் முன்வருகின்றனர். இது போன்ற பொருட்கள் அந்த ஆய்வக கப்பலிலேயே வைக்கப்படுகின்றன. உள்ளூர்வாசிகளுக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்தும் அதற்கான மாற்றுப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த பொருட்களை அவர்களுக்கு காண்பிக்கின்றனர்.

இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் வணிக கடற்கரை அதிகாரியான சைமன் கூறுகையில்,

இந்தியா பிரான்ஸை விட பத்து மடங்கு குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறது, அதாவது ஒரு நபருக்கு ஆண்டுக்கு சுமார் 7 கிலோ கிராம் வரை பயன்படுத்துவதாக கூறுகிறார்.

ஒவ்வொரு நிமிடமும் குறைந்தது 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. இதில் 78% நிலம் மூலங்களிலிருந்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்களால், தூண்டப்பட்டு இந்த பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார்.

கடலில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளில் 1% சதவீதம் மட்டுமே மேல் பரப்புக்கு வருகிறது. மற்ற கழிவுகள் கடலை அடைவதற்கு முன்னர் நிலத்தின் மூலத்திலிருந்து வரும் கழிவுகளை நிறுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தான் இந்த பயணம் மேற்கொண்டுள்ளதாக சைமன் கூறுகிறார். மேலும் பிளாஸ்டிக் குறைவாக சார்ந்து வாழும் வாழ்க்கை முறையை கண்டறிந்த சுமார் 5000 குழந்தைகள் தங்கள் குழுவில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஆப்பிரிக்கா நாடுகளில் தற்போது பத்து மறுசுழற்சி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, பிலிப்பைன்ஸில் இருக்கும் போது வருடத்திற்கு 300 டன் மறுசுழற்சி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்க இந்த குழு எளிதாக்கியதாகவும் சைமன் கூறுகிறார்.

ஒவ்வொரு நாட்டிலும் இதையே பிரதிபலிக்க நாங்கள் விரும்புகிறோம் என்றும் கூறுகிறார். இந்த கப்பல் பயணம் அடுத்த ஆண்டுக்குள் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் தங்களது முயற்சிகள் நிறுத்தப்படமாட்டாது என்று உறுதி அளிக்கிறார்.

இந்த பயணத்திற்கு பிறகு சுத்தம் செய்தல் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த ஒரு படகை உருவாக்க விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் சென்று இதற்கான தீர்வுகளை விழிப்புணர்வு அளித்து வருகின்றனர். அப்படி வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தலாம் என்ற விவரமும் கூறுகின்றனர்.

pic courtesy plasticodyssey org

தண்ணீரை இயற்கையாகவே புதுப்பிக்கும் ஒரு கேரஃப், தண்ணீரை சுத்திகரிக்கும் ஒரு களிமண் கண்ணாடி, பூசணியில் இருந்து தயாரிக்கப்பட்ட கிண்ணம் போன்ற பொருள், தரையில் இருந்து வளரும் ஒரு பல் துலக்குதல், தேங்காய் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் பொருட்கள் ( கரண்டி சட்டி) , பனை மரத்திலிருந்து செய்யப்பட்ட உறுதியான பெட்டிகள், அமேசானிய தாவரத்திலிருந்து பெறப்பட்ட ஒரு ஷாப்பிங் பை என பிளாஸ்டிக் மாற்றாக என்னென்ன பொருட்கள் பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

pic courtesy plasticodyssey org

நம் அன்றாட வாழ்க்கையிலும் பழக்க வழக்கத்தில் இருந்தும் இந்த பொருட்களை மாற்றுவது குறித்து இந்த குழு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தங்களது கண்டுபிடிப்புகள் குறித்தும் உள்ளூர் வாசிகளிடம் பகிர்ந்து கொள்கிறது. அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீர்வுகளை கண்காட்சி போல் காட்சிப்படுத்துகிறது.

சூழல் செயல்பாட்டாளர் ஜீயோ டாமின்

பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்து பூவுலகின் நண்பர்கள், இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் சூழலியல் செயல்பாட்டாளர் ஜீயோ டாமின் விகடனுக்கு பகிர்ந்துக்கொண்டார்.

இதுபோன்ற முன்னெடுப்புகளை வரவேற்கக் கூடியது தான் என்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது என்பது நிரந்தர தீர்வு அல்ல. மசாலா பொருட்கள், சாக்லேட்டில் பயன்படுத்தப்படும் கவர் என மறுசுழற்சி செய்ய முடியாத ஏராளமான நெகிழிகள் உள்ளன.

உதாரணத்திற்கு ஆடைகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. சிந்தடிக் என்று கூறப்படும் ஆடைகளில் முதன்மையாக இருப்பது நெகிழி தான். இது போன்ற ஆடைகளில் பயன்படுத்தப்படும் நெகிழிகள் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பெறப்படும் பைபரில் இருந்து தான் உருவாக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து ஆடைகளை தயாரிக்கின்றனர், ஆனால் ஆடைகளை, மறுசுழற்சி செய்து பார்த்ததுண்டா? எனவே மறுசுழற்சி என்பது நிரந்தர தீர்வு அல்ல என்று கூறுகிறார் ஜீயோ டாமின்.

கடலில் இருக்கும் குப்பைகள் பெரும்பாலும் மக்களால் ஏற்படுவதாக கருதுகின்றனர், ஆனால் அது அப்படி இல்லை. ஆறுகளில் இருந்தும் நதிகளில் இருந்தும் இதுபோன்ற குப்பைகள் கடலில் சேருகின்றன. வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காரணமாக வேண்டுமானால் கடலில் இது போன்ற குப்பைகள் அடித்துக் கொண்டு செல்லலாம் என்று கூறுகிறார்.

உலக அளவில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் அளவு வெறும் 9 சதவீதம் தான். அதுவும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் சாலைகளை தூய்மையாக வைத்திருப்பது காரணம் அவர்கள் தங்களது கழிவுகளை மறுசுழற்சி செய்வது இல்லை. மாறாக கப்பல் வழியாக தங்களது கழிவுகளை பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மறுசுழற்சி செய்ய அனுப்புகின்றனர்.

எந்த ஒரு உற்பத்தியாளரும் தங்களது கழிவுகளை அவர்கள் தான் நீக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ள நிலையில், பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டும் அவ்வாறு செய்வதில்லை. ஒரு வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்குகிறார் என்றால், அவர் அந்த பொருளை மட்டும் தான் வாங்குகிறார். பணம் கொடுத்து அந்த பிளாஸ்டிக் கவரை அவர் வாங்கவில்லை, ஆனால் அந்த குப்பைகளுக்கு மக்கள்தான் பொறுப்பு என்கின்றனர்.

பிளாஸ்டிக் உற்பத்திக்கு மானியம் வழங்கும் அரசு, சாதாரணமாக பிளாஸ்டிக் மாற்றாக பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்திக்கு மானியம் வழங்கினால் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் குறையும் மக்கள் பிளாஸ்டிக்-க்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்களை குறைந்த விலையில் பெறுவார்கள் என்று கூறுகிறார்.

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது என்பது ஒரு தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வாகவும், மாற்று வழியாகவும் பாதுகாப்பு வழியாகவும் இருக்காது என்கிறார் ஜீயோ டாமின்.

Kancha Gachibowli: காடழிப்பில் இறங்கிய தெலங்கானா அரசு; வெகுண்ட மாணவர்கள்- தடை விதித்த நீதிமன்றம்!

ஹைதராபாத்தின் நுரையீரலாக கருதப்படும் காஞ்சா கச்சிபௌலி காடானது, கடந்த சில தினங்களாக தேசிய அளவில் பெரும் கவனத்தை மக்கள் மத்தியில் ஈர்த்திருக்கிறது. காஞ்சா என்றால் 'மேய்ச்சல் நிலம்' அல்லது 'கழிவு நிலம்' ... மேலும் பார்க்க

ஈரோடு: 'சிலு சிலு சிலு சாரல் மழை!' - குஷியில் நனைந்த மக்கள் | Photo Album

ஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் ... மேலும் பார்க்க

`புதுச்சேரியின் வேடந்தாங்கல்' - ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் வண்ணமயமான காட்சிகள்| Photo Album

ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேர... மேலும் பார்க்க

Elephant Webseries: வாரணம் ஆயிரம்... கோடையும் யானைகளும்! | Photo Album

யானைகள்யானைகள்யானையின் கால் தடம்யானைகள்யானையானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானையானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... மேலும் பார்க்க