செய்திகள் :

மோடி பாணியில் சந்திரபாபு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 99 பைசாவுக்கு 21 ஏக்கர் நிலம்! செம ஐடியா!!

post image

துறைமுக நகரமாக இருக்கும் விசாகப்பட்டினத்தை, தகவல்தொழில்நுட்ப நகரமாக மாற்றுவதற்கான முதற்கட்டமாக, டிசிஎஸ் நிறுவனத்துக்கு 21.16 ஏக்கர் நிலத்தை அடையாளத் தொகையாக வெறும் 99 பைசாவுக்குக் கொடுத்திருக்கிறது ஆந்திர அரசு.

இது தொடர்பாக, ஆந்திர அரசு அதிகாரிகளுக்கும் டிசிஎஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ஆந்திர அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கத் தேவையான நிலத்தை 99 பைசாவுக்குக் கொடுத்த திட்டத்தை பின்பற்றி, தற்போது ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்னும் 90 நாள்களுக்குள் விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது வேலையைத் தொடங்கும் என்றும், முதற்கட்டமாக, வாடகைக் கட்டடத்தில் நிறுவனம் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் டிசிஎஸ் புதிய கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் என்றும், இங்கு 10 ஆயிரம் ஊழியர்கள் தங்குவதற்கான வீடுகள் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் இந்தக் கட்டுமானப் பணிகள் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

துறைமுக நகரமாக இருக்கும் விசாகப்பட்டினத்தில், டிசிஎஸ் நிறுவனம் தொடங்கப்படுவதையடுத்து, அங்குப் படிப்படியாக தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, தகவல்தொழில்நுட்ப நகரமாக மாறுவதற்கான அடித்தளம் இடப்பட்டிருப்பதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் தகவல்தொழில்நுட்பத்தில சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதர தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் தங்களது நிறுவனங்களின் கிளைகளைஅமைப்பது தொடர்பாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும் என்று... மேலும் பார்க்க

அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், "முன்னாள் முதல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார்.முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபத... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் பிணையில் வந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்: பாஜக

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிணையில் வெளிவந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்ட் வழக்கி... மேலும் பார்க்க

2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜர்!

ஹரியாணா நில ஒப்பந்தம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். மேலும் பார்க்க