செய்திகள் :

தொடர்ந்து பரவும் நோயினால் அங்கீகாரத்தை இழக்கும் அமெரிக்கா?

post image

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தட்டம்மை பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மாகாணமான டெக்ஸாஸில் கடந்த 5 நாள்களில் மட்டும் 20 பேருக்கு புதியதாகத் தட்டம்மை பாதிப்பு உண்டாகியுள்ளதாகவும், குறைந்தது 58 பேர் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாகாணத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டெக்ஸாஸ் முழுவதும் 561 பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தட்டம்மை நோயானது வேகமாகப் பரவும் திறன் கொண்டவை என்பதினால் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தாண்டு துவங்கியதிலிருந்து அமெரிக்காவின் 24 மாகாணங்களில் 712 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 97 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் அந்நாட்டின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

இத்துடன், இந்தத் தொற்றுநோய் பரவலானது தொடர்ந்தால், கடந்த 2000-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘தட்டம்மை ஒழிக்கப்பட்டது’ எனும் அங்கீகாரத்தை அமெரிக்கா இழக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, தட்டம்மை அல்லது மீஸல்ஸ் எனப்படும் இந்தத் தொற்று நோயானது ஒரு வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்பாகும். இது ஏற்கனவே பாதிக்கப்பட்டவருடனான நேரடி தொடர்பு மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு பரவக் கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயினால் அதிகம் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தட்டம்மையானது சுவாசக் குழாயை பாதித்து, முழு உடலுக்கும் பரவும் எனவும் அவ்வாறு பரவினால் தீவிர காய்ச்சல், இருமல், சளி, தேமல்கள் ஆகியவை உண்டாகும் எனவும் இந்த நோய் தீவிரமடைந்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் அபாயமுள்ளது என அதிகாரிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்... மேலும் பார்க்க

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கட... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்ற... மேலும் பார்க்க

அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் பாதிப்படையும் இந்தியா?

வரும் 2050-க்குள் ஆசிய நாடுகளில் உற்பத்தியாகும் அரிசியினால் அந்நாடுகளின் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக் கூடும் என அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்... மேலும் பார்க்க

யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 58 பேர் பலி!

யேமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் ம... மேலும் பார்க்க