ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள்...
இறந்தவர்களைப் பாட வைக்க விருப்பமில்லை: ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசியுள்ளார்.
தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இறுதியாக, ரவி மோகனின் பிரதர் படத்திற்கு இசையமைத்திருந்தார். அதில், இடம்பெற்ற மக்காமிஷி பாடல் கவனம் பெற்றது.
தற்போது, குறைவான படங்களுக்கே இசையமைப்பதுடன் இசைக் கச்சேரிகளில் முழு கவனத்தைச் செலுத்து வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஹாரிஸ் ஜெயராஜிடம், “மறைந்த பாடகர்களான மலேசியா வாசுதேவன், பவதாரிணி உள்ளிட்டோரின் குரல்களை ஏஐ மூலம் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் ஏன் அப்படி செய்வதில்லை?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, ஹாரிஸ், “வாய்ப்புகாக பல பாடகர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது மறைந்தவர்களைப் பாட வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. எதற்கு ஏஐ-யைப் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவோ பாடகர்கள் இருக்கிறார்கள். வாய்ப்புகளை உயிருடன் இருப்பவர்களுக்கு வழங்கினால் அதில் ஒரு பயனாவது இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எஸ்.பி.பி, அஜித் குமார்... இளையராஜா செய்வது சரியா?