`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி ...
பாங்காக் சென்ற இட்லி கடை படக்குழு!
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறுகிறது.
ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம், இட்லி கடை எனப் பெயரிடப்பட்ட படத்தை இயக்கி, நடித்து வந்தார்.
இப்படத்தில் நடிகர்கள் ராஜ் கிரண், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மெனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முன்னதாக, இட்லி கடை திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் குட் பேட் அக்லி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதாலும் படப்பிடிப்பு முடியாத காரணத்தினாலும் படத்தின் வெளியீட்டை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு தனுஷ் மாற்றினார்.

இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர்கள் பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் உள்ளிட்டோர் பாங்காக் சென்றுள்ளனர்.
தேரே இஷ்க் மெயின் படப்பிடிப்புக்காக தில்லியில் இருக்கும் தனுஷ் அங்கிருந்து பாங்காக் செல்வார் எனத் தகவல்.
இதையும் படிக்க: இறந்தவர்களைப் பாட வைக்க விருப்பமில்லை: ஹாரிஸ் ஜெயராஜ்