செய்திகள் :

Kancha Gachibowli: காடழிப்பில் இறங்கிய தெலங்கானா அரசு; வெகுண்ட மாணவர்கள்- தடை விதித்த நீதிமன்றம்!

post image

ஹைதராபாத்தின் நுரையீரலாக கருதப்படும் காஞ்சா கச்சிபௌலி காடானது, கடந்த சில தினங்களாக தேசிய அளவில் பெரும் கவனத்தை மக்கள் மத்தியில் ஈர்த்திருக்கிறது. காஞ்சா என்றால் 'மேய்ச்சல் நிலம்' அல்லது 'கழிவு நிலம்' எனவும்; கச்சி என்பது 'சுண்ணாம்பு சாந்து' எனவும் பௌலி என்றால் 'படிக்கிணறு' எனவும் பொருள்படுகிறது. இக்காடானது முதலில் மேய்ச்சல் நிலமாக இருந்ததாலும் சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட படிக்கிணறு அப்பகுதியில் இருந்ததாலும், இவ்வாறு பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேய்ச்சல் நிலமாக இருந்த அந்த 400 ஏக்கர் நிலப்பரப்பே இன்று தெலங்கானாவின் மாநில பறவையான இந்தியன் ரோலர் உட்பட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 700க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள், பத்து வகையான பாலூட்டிகள், 15 வகையான ஊர்வனங்கள் மற்றும் இன்னும் பல உயிரினங்களுக்கு வீடாகும். இந்தக் காடானது வெப்பநிலையை குறைத்து ஈரப்பதத்தை அதிகரித்து இயற்கை கார்பன் சின்க்காக ( carbon sink) செயல்படுவது மட்டுமின்றி உள்ளூர் காலநிலையை ஒழுங்குபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றது.

இந்நிலையில் தெலங்கானா அரசானது இந்த 400 ஏக்கர் நிலப்பரப்பை IT தொழிற்சாலைகளுக்கு ஏலமிட திட்டமிட்டு கடந்த மார்ச் 30ஆம் தேதி பல புல்டோசர்களைக் கொண்டு இக்காட்டினை அழிக்கத் தொடங்கியது. அக்காட்டில் இருந்த 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களில் பத்தாயிரம் மரங்கள் போல அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்காட்டிற்கு அருகே அமைந்துள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் அக்காட்டிற்காகவும் அக்காட்டினை இருப்பிடமாகக் கொண்டுள்ள உயிரினங்களுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர்.

அவ்வாறு போராட்டத்தில் இறங்கிய மாணவர்களில் 53 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இப்பிரச்னையானது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பார்வையை எட்டியது. உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையின் தீர்ப்பாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, தெலங்கானா அரசு இக்காட்டினை அழிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2004ஆம் ஆண்டு இந்த 400 ஏக்கர் நிலப்பரப்பானது IMG Academies Bharat Private Limited நிறுவனத்திற்கு விளையாட்டு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டது. IMG நிறுவனமானது எந்த விதமான வேலையையும் அந்நிலத்தில் தொடராததால் 2006 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தெலங்கானா அரசானது IT தொழில் நிறுவனம் கட்டும் திட்டத்தை கைவிட்டது மட்டுமல்லாமல் அதற்கு பதிலாக 400 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த காடு மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் உட்பட மொத்தம் 2000 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பை உலக அளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பூங்காவாக ( Eco Park )மாற்ற திட்டமிட்டுள்ளது. எனினும் இம்முடிவானது இன்னும் தெலங்கானா முதலமைச்சரால் தீர்மானம் செய்யவில்லை.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அம்மாநிலத்தின் வெளிப்புறத்தில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் எனவும் புதிய பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான நிதியும் ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதற்கும் மாணவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு: 'சிலு சிலு சிலு சாரல் மழை!' - குஷியில் நனைந்த மக்கள் | Photo Album

ஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் ... மேலும் பார்க்க

`புதுச்சேரியின் வேடந்தாங்கல்' - ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் வண்ணமயமான காட்சிகள்| Photo Album

ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேர... மேலும் பார்க்க

Elephant Webseries: வாரணம் ஆயிரம்... கோடையும் யானைகளும்! | Photo Album

யானைகள்யானைகள்யானையின் கால் தடம்யானைகள்யானையானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானையானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... மேலும் பார்க்க

`கிரேட் எஸ்கேப்’ - யானை வந்தது கூட தெரியாமல் நடைபாதையில் உறங்கிய நபர்கள், உயிர் தப்பிய அதிர்ஷ்டம்!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருந்தது வருகிறது முதுமலை புலிகள் காப்பகம். அடர் வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியே வரும் சில யானைகள், அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வ... மேலும் பார்க்க

கோவை: நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்படப்போகும் 1000 மரங்கள் | Photo Album

சாலை ஓரங்களில் இருக்கும் 1000க்கு மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இடம்: அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே உள்ள தேரம்பாளையம்.அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் வெட்டி... மேலும் பார்க்க