செய்திகள் :

சொந்த வீடு கட்ட போறீங்களா? உங்கள் பட்ஜெட்டில் கடைபிடிக்க வேண்டிய `13' கோல்டன் ரூல்ஸ்!

post image

'வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணத்தை செஞ்சு பாரு' என்ற சொலவடையை நிச்சயம் நாம் கடக்காமல் இருந்திருக்க மாட்டோம்.

இந்த சொலவடையில் அவர்கள் முக்கியமாக கூறுவது 'பட்ஜெட்டை' தான்.

வீடு கட்டப்போகிறோம் என்று ஆகிவிட்டால், 'இந்த' விஷயங்களுக்கு எல்லாம் தெளிவாக பட்ஜெட்டை போட்டுவிடுங்கள் என்று லிஸ்ட்டை பட்டியலிடுகிறார் ரியல் எஸ்டேட் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி.

"1. இது தேவையில்லாத செலவு என்று தோன்றலாம். ஆனால், இது தான் மிக முக்கியமான செலவு. நீங்கள் கட்டடம் கட்டப்போகும் நிலம் எப்படி இருக்கிறது, அது கட்டடத்தை தாங்குமா? என்பதை தெரிந்துகொள்வது அவசியம். ஆக, முதலில் 'மண் பரிசோதனை'க்கு காசு எடுத்து வைத்துவிடுங்கள்.

சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி
சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி

2. வரைப்படம் - ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து கட்டும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பக்காவான- அரசின் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின் படி- குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வீட்டு வரைபடத்திற்கு அடுத்த செலவு.

3. 'அந்த நிலத்திற்கான அளவீடு மற்றும் அதற்குண்டான சட்டதிட்டதின் படி தான், நம்முடைய கட்டடத்தில் அறைகள், மாடி, பால்கனி, கழிவறை போன்றவை அமைந்துள்ளதா? ஒப்புதல்களுக்கு பிளான் அப்ரூவல் மற்றும் சார்ந்த ஃபீஸை ரெடி செய்துவிடுங்கள்.

4. தேவைப்பட்டால் 'தடையில்லா சான்றிதழ்'களுக்கும் அப்ளை செய்ய வேண்டும். அதற்கும் தனி கட்டணம் உண்டு.

5. 'இவர் இல்லையேல், கட்டடமே இல்லை' அதனால், சிவில், கட்டமைப்பு, எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் நுணுக்கங்களை அறிந்த இன்ஜீனியருக்கான கட்டணத்தை சரியாக முன்னரே பேசி முடிவு செய்துவிடுங்கள்.

6. கட்டட மற்றும் சார்ந்த நிபுணர்கள், தொழிலாளர்களுக்கான சம்பளம் - இதை முதலிலேயே தெளிவாக பேசிவிடுங்கள். இன்ஜினீயர் மற்றும் கட்டிடகலை நிபுணர் ஃபீஸும், இதையும் பக்காவாக முடித்துவைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்போது தான், கட்டடம் வளரும்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாது.

வீடு கட்ட: பட்ஜெட் எளிய வழிகாட்டி!
வீடு கட்ட: பட்ஜெட் எளிய வழிகாட்டி!

7. நீங்கள் எந்த கட்டிட மெட்டீரியல்களை கட்டடத்திற்கு பயன்படுத்த விரும்புகிறீர்கள்? அது எத்தனை ரூபாய்? மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதை முதலிலேயே ஆராய்ந்து சரி பார்த்து கணக்கு போட்டு பணத்திற்கான ஏற்பாட்டை செய்துவிடுங்கள்.

8. வீட்டிற்கான ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு தோண்டுவதற்கும் பட்ஜெட்டில் கொஞ்சம் பணத்தை ஒதுக்கிவிடுங்கள்.

9. மின்சாரம் மற்றும் பிளம்பிங், கீழ் தரை மற்றும் மாடி டைல்ஸ், தண்ணீர்த்தொட்டி, சார்ந்த வேலைகளுக்கும் பணம் தேவை.

10. தண்ணீர் டேங்க், நிலத்தடி நீர் பைப்புகள், மெட்ரோ மற்றும் முனிசிபல் நீர், கழிவு நீர், திட கழிவு அகற்றல், மழை நீர் வடிகால் போன்றவற்றை வீடு கட்டும்போதே சரியாக செய்துவிட்டால் பின்னர் பிரச்னைகள் எழாது.

லிஃப்ட் வேண்டுமா? - யோசியுங்கள்
லிஃப்ட் வேண்டுமா? - யோசியுங்கள்

11. காம்பவுண்ட் சுவர் மற்றும் சார்ந்த மின்விளக்கு, வீட்டு முகப்பு மற்றும் வெளித்தோற்றம், பெயின்டிங் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள், வெளி கேட் மற்றும் நுழைவாயில் உண்டான செலவுகள் பட்ஜெட் செய்து கொள்ளுதல் வேண்டும்.

12. லிஃப்ட், ஜெனரேட்டர், சிசிடிவி, போன்ற செலவுகளை தேவைப்பட்டால் மட்டும் செய்யுங்கள்.

13. சைட் கிளியரன்ஸ்- சாலை கடந்து செல்லும் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தொந்தரவு இல்லாதவாறு கட்டிடம் கட்டுவது மிக மிக முக்கியம். இதை கட்டாயம் செய்துவிடுங்கள்.

இதை சரியாக, தெளிவாக செய்துவிட்டாலே, நீங்கள் பாதி கட்டடத்தை சூப்பராக முடித்துவிட்டீர்கள் என்று பொருள் கொள்ளலாம்" என்கிறார் வழக்கறிஞர் முத்துசாமி.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Real Estate: 'வீட்டின் அருகில் இருக்கும் சாலை 'இந்த' மீட்டரில் இருக்கிறதா?' - செக் செஞ்சுடுங்க!

பரபர வேலைகளை முடித்து வரும் நமக்கு, ஆசுவாசத்தையும், ஒருவித அமைதியையும் தருவது நமது 'வீடு'. அப்படிப்பட்ட வீட்டை நாம் கட்டும்போதோ அல்லது வாங்கும்போதோ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீடு கட்டுவதற்காக நி... மேலும் பார்க்க

'பார்க்கிங் எத்தனை அடி?' - அப்பார்ட்மென்ட் வாங்குபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செக்லிஸ்ட்!

'சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான மக்களின் வீட்டு சாய்ஸ் 'அப்பார்ட்மென்டாக' இருக்கிறது. தனி வீடு வாங்கும்போது என்னென்ன செக் செய்கிறோமோ, அதே மாதிரியான 'சில செக்'குகள் அப்பார்ட்மென்ட் வாங்கும்போத... மேலும் பார்க்க

Real Estate: வீடு கட்டும்போதும், கட்டிமுடித்த பிறகும் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட்டுகள் என்னென்ன?

'வீட்டில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும்?', 'எத்தனை அடி இருக்க வேண்டும்?', 'என்ன கலர் பெயிண்ட் அடிக்க வேண்டும்?' என்று பார்த்துப் பார்த்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வோம். ஆனால், சின்ன, சின்ன விஷயங... மேலும் பார்க்க

நிலத்துடன் சேர்த்து சொந்த வீடு... நாவலூரில் சொகுசு வில்லா!

டிராபிக் ஜாம், காற்று மாசு, நெரிசல் இப்படி எந்த தொந்தரவும் இல்லாம மனசை ரிலாக்ஸ் பண்ற மாதிரி இயற்கையை ரசிக்கக்கூடிய இடத்தில அமைதியான சூழல்ல ஒரு luxury வீடு இருந்தா அந்த உணர்வு எப்படி இருக்கும் தெரியுமா... மேலும் பார்க்க

DTCP, CMDA, பஞ்சாயத்து அப்ரூவல் ஏன் முக்கியம்.. அது இல்லையென்றால், என்ன செய்ய வேண்டும்?!

வீடு, நிலம் வாங்கும்போது அது பிடித்திருக்கிறதா, சரியான இடத்தில் இருக்கிறதா, அதன் மதிப்பு எதிர்காலத்தில் உயருமா, தண்ணீர், மின்சாரம் இருக்கிறதா என்பதையெல்லாம் தேடி தேடி பார்த்து வாங்குவோம். இத்துடன் DTC... மேலும் பார்க்க

'வீடு வாங்கப்போறீங்களா... கட்டப்போறீங்களா?!' - இந்த 3 விஷயங்கள் கட்டாயம்!

வீடு என்பது பெரும்பாலானவர்களின் பெரும் கனவு. பார்த்து பார்த்து வீடு கட்டுவோம் அல்லது வீடு வாங்குவோம். ஆனால், அதற்கு பின்னாலான ஆவணங்களை, சில விஷயங்களை மறந்துவிடுவோம் அல்லது சறுக்கி விடுவோம். அது குறித்... மேலும் பார்க்க