ரூ.7.79 கோடி வருமான வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் ஜூஸ் கடைக்காரர்!
'பார்க்கிங் எத்தனை அடி?' - அப்பார்ட்மென்ட் வாங்குபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செக்லிஸ்ட்!
'சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான மக்களின் வீட்டு சாய்ஸ் 'அப்பார்ட்மென்டாக' இருக்கிறது. தனி வீடு வாங்கும்போது என்னென்ன செக் செய்கிறோமோ, அதே மாதிரியான 'சில செக்'குகள் அப்பார்ட்மென்ட் வாங்கும்போதும் உண்டு.
அது என்னென்ன என்பதை விளக்குகிறார் தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர்.
``தனி வீடுகளைப் போல வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம் போன்றவை அப்பார்ட்மெண்டுக்கும் உண்டு. அதனால், அதை வாங்கியதும் இது எல்லாம் உங்கள் பெயருக்கு பக்காவாக மாற்றி கொள்ளுங்கள்.

'இது' தான் வருங்காலத்தில் லாபம்!
அப்பார்ட்மென்ட் வாங்கியதும் பத்திரத்தில் 'நமக்கு எவ்வளவு Undividend Share உள்ளது?' என்பதை பார்க்க வேண்டும். இது தான் எதிர்காலத்தில் நமக்கான ரிட்டனை தர உள்ளது. சில ஆண்டுகளில், அந்தக் கட்டடத்தின் மதிப்பு ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.
ஆனால், அந்த நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். அப்போது, நமக்கு கொடுத்துள்ள 'அன்டிவிடன்ட் ஷேர்' தான் நமக்கான லாபத்தை வழங்கும்.
யார் என்று தெரியுமா?
'நமது சின்ன வயதில் எப்படி பக்கத்து வீட்டுக்காரர்கள் முதல் சுற்றி இருப்பவர்கள் வரை அனைவரையும் தெரிந்து வைத்திருப்போமோ, அவர்களுடன் பேசுவோமோ', அதை அப்பார்ட்மென்டிலும் ஃபாலோ செய்ய வேண்டும்.
அதை விட, வீட்டின் உரிமையாளர் 'அவர் தானா?', ஒருவேளை அவர் இல்லையென்றால், 'உரிமையாளர் யார்?' என்று தெரிந்துகொண்டு அவர்களிடம் ஒரு நல்ல உறவை உருவாக்கி கொள்ளுங்கள். 'ஏன்' என்ற கேள்வி எட்டி பார்க்கிறதா? இதில் மிகப்பெரிய பிளஸ் அடங்கியுள்ளது.
பக்கத்து வீட்டுக்காரர்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவர்களிடம் நட்பு பாராட்டலாம். எதாவது சூழலில் இந்த நட்பு நிச்சயம் நமக்கு கைக்கொடுக்கும். எதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டாலும், எளிதாக பேசி சரிசெய்துகொள்ள முடியும்.

உரிமையாளர்களை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
நமது பக்கத்து வீட்டில் இருப்பவர் அந்த வீட்டின் உரிமையாளர் அல்ல, குடியிருப்பவர் என்று வைத்துகொள்வோம். அவருடன் எதாவது பிரச்னை ஏற்பட்டால் அவரிடமே நேரடியாக டீல் செய்வது பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடலாம். அதனால், அந்த வீட்டின் உரிமையாளருடன் நல்ல நட்பு இருக்கும் பட்சத்தில் அந்த சிக்கலை எளிதாக கையாளலாம்.
அவரிடம் சொல்லாமல், நேரடியாக குடியிருப்பவரிடம் பேசினால், உரிமையாளருக்கு நம் மீது அதிருப்தி ஏற்படும். குடியிருப்பவர்கள் இன்று, நாளை என்று எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், வீட்டின் உரிமையாளர் அப்படி இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சங்கம் அவசியம்
அப்பார்ட்மென்ட் சட்டத்தின் படி, எல்லா குடியிருப்புகளுக்கும் ஒரு சங்கம் வேண்டும். நீங்கள் வாங்கும் அப்பார்ட்மென்டில் இருக்கும் சங்கத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். சங்கம் இல்லையென்றால், புதிதாக உருவாக்குங்கள். அப்போது தான், அப்பார்ட்மென்டில் பொதுவாக எழும் பிரச்னைகளுக்கு கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கலாம்.
பாதுக்காப்பாக இருக்கிறதா?
'குறிப்பிட்ட அந்த அப்பார்ட்மென்ட் பாதுகாப்பானதா?' என்பதை வாங்குவதற்கு முன்பே தெரிந்துகொள்ள வேண்டும். வாங்கியப் பின்னர், 'அதற்கு எத்தனை பாதுகாவலர்கள்?', 'அவர்கள் யார் யார்?', 'எந்த நேரத்தில் யார் இருப்பார்கள்?' என்பதை முழுவதும் தெரிந்துகொள்ளுங்கள்.

எது எங்கே?
அப்பார்ட்மென்டை சுற்றி இருக்கும் கடைகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். எதாவது அவசியம் நேரும் பட்சத்தில், இது உங்களுக்கு சூழலை எளிதாக்கும்.
'இவர்களது' நம்பர்கள்
பிளம்பர், எலக்ட்ரிசீயன் போன்றவர்களின் செல்போன் எண்களை வாங்கி வைத்துகொள்ளுங்கள். இது கட்டாயம் பயன்படும்.
சங்கத்தில் 'காசன் டெபாசிட்' (Caution Deposit) கட்டிவிடுங்கள். இது அப்பார்ட்மென்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை சரி செய்ய உதவும்.
வீட்டின் உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து தனி பட்டா அல்லது கூட்டு பட்டா வாங்கி வைத்துகொள்ள வேண்டும்.
வீட்டின் எலெக்ட்ரிக்கல், பிளம்பிங், ஸ்ட்ரக்சுரல் டிராயிங் ஆகியவற்றை பில்டரிடம் இருந்து வாங்கிவிடுங்கள். இது வீட்டு ரிப்பேரின் போது மிகப்பெரிய உதவு செய்யும்.
பார்க்கிங்
நம்முடைய 'கார் மற்றும் பைக் பார்க்கிங் எங்கு இருக்கிறது?', 'எத்தனை அகலம், எத்தனை நீளம்?', 'உங்கள் பெயர் அந்தப் பார்க்கிங்கில் இருக்கிறதா?' என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உங்களது கார் மற்றும் பைக்கை நிறுத்தி போட்டோ எடுத்து வைத்துகொள்ளுங்கள்.
வேறு யாராவது நமது கார் மற்றும் பைக் பார்க்கிங்கில் அவர்களது வாகனத்தை அனுமதிக்காதீர்கள். அது நிரந்தரமானால், நமக்கு தான் பிரச்னை. ஒருவேளை, யாராவது பிரச்னை செய்தால், நீங்கள் எடுத்து வைத்திருக்கும் போட்டோ உதவும்.
எத்தனை அகலம், எத்தனை நீளம் என்பதை தெரிந்துகொள்வதன் மூலம், புதிதாக வாகனங்கள் வாங்கும்போது, அதற்கேற்ப வாகனங்களை வாங்கலாம்.
'டிரைவ் வே' - அதாவது நீங்கள் வாகனத்தை வெளியே எடுத்தும் செல்லும் வழி. அது உங்களுக்கு சரியாக உள்ளதா, இடையூறாக உள்ளதா என்பதை கவனமாக பாருங்கள்.
இவை எல்லாம் பாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்". என்கிறார்.
கவனமாக வீடு வாங்குங்கள்... மகிழ்ச்சியாக இருங்கள்..!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
