செய்திகள் :

கொடைக்கானல் காட்டேஜ் ஓனர் எரித்துக் கொலை; மதுரை இளைஞர் கைது - நடந்தது என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சரடி மெத்து பெருமாள்பள்ளத்தைத் சேர்ந்தவர் சிவராஜன் (58). இவர் அதேபகுதியில் காட்டேஜ் நடத்தி வந்தார்.

இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தினர் மதுரை அழகர்கோயில் அருகே உள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு போதையில் இருந்து மீள்வதற்காக சிகிச்சையில் இருந்து மணிகண்டன் (28) உள்ளிட்ட சிலருடன் சிவராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல்

அதனடிப்படையில் சிகிச்சையை முடித்து வந்த மணிகண்டன் மற்றும் அவர்கள் நண்பரக்ள் சிவராஜனுடைய காட்டோஜிக்கு சென்று தங்கினர்.

இதனைத்தொடர்ந்து காட்டேஜில் இருந்த சிவராஜன் திடீரென மாயமானார். சில நாள்கள் கழித்து சிவராஜனை காணவில்லை என குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் கொடைக்கானல் போலீஸார் விசாரித்தனர். காட்டேஜில் விசாரணை நடத்தியபோது, சிவராஜன் இருந்த அறையில் ரத்தக்கறை இருந்ததை பார்த்துள்ளனர். அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்தனர். அவர்கள் மணிகண்டன் தரப்பினர் வந்து தங்கியதைத் தெரிவித்துள்ளனர்.

கைது

இதையடுத்து மணிகண்டனை பிடித்து விசாரித்தபோது, சிவராஜனை எரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரின் உடலை அருகே தூக்கிவீசியதும் தெரியவந்தது. போலீஸார் சிவராஜனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பினர். மணிகண்டனை கைது செய்து இவ்வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சுடப்பட்ட பொன்வண்ணன்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்... மேலும் பார்க்க

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரத... மேலும் பார்க்க

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணிய... மேலும் பார்க்க

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படி... மேலும் பார்க்க