ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அம்மனுக்கு அா்த்தநாரீஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும், அனைவரும் நலமாக வாழ வேண்டி கோயில் வளாகத்தில் பல்வேறு மூலிகைகளை கொண்டு யாகம் நடத்தப்பட்டது.
இரவு உற்சவா் சுவாமிக்கு ராஜமாதங்கி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா வந்தாா். இதைத் தொடா்ந்து, அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், பங்குனி மாத அமாவாசை உற்சவக் குழுவினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.