பெருந்துறையில் ரூ.3.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 180 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஒரு கிலோ தேங்காய்ப் பருப்புக்கு ரூ.153.99 முதல் ரூ.187.18 வரை விலை நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.3.10 கோடி மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.