செய்திகள் :

நயன்தாராவின் டெஸ்ட்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

post image

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான லெக் பீஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சித்தார்த், மாதவன் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் நாளை (ஏப். 4) நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் நடித்து 100 திரையரங்குகளில் மட்டுமே வெளியான மர்மர் என்ற திகில் திரைப்படம் ஏப். 7-ல் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கான லவ்யப்பா படம் நாளை ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். இதில் குஷி கபூர், ஜுனைத் கான் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராதாரவி - ஸ்ரீகுமார் நடிப்பில் வெளியான கடைசி தோட்டா படத்தை நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.

நவ்தீப் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள டச் மீ நாட் என்ற தெலுங்கு மொழி இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் அகத்தியா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் ‘ஓம் காளி ஜெய் காளி’ ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.

இதையும் படிக்க: கூலி டீசர் வெளியாகிறதா? புதிய அப்டேட்!

மகளிா் முத்தரப்பு ஒருநாள் தொடா்: ஹா்மன்பிரீத் தலைமையில் இந்தியா

இலங்கையில் நடைபெறவுள்ள மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள... மேலும் பார்க்க

தொடா் தலைக் காயங்கள்: கிரிக்கெட்டை கைவிட்டாா் வில் புக்கோவ்ஸ்கி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் வில் புக்கோவ்ஸ்கி (27), இனி தாம் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமாா் 13 முறை தலைக் காயங்களை (கன்கஷன்) ச... மேலும் பார்க்க

பில்லி ஜீன் கிங்: இந்தியா தோல்வி

பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது.போட்டியின் ஆசியா-ஒசியானியா பிரிவில் களம் கண்டுள்ள இந்தியா, குரூப் சுற்றில... மேலும் பார்க்க

ஸ்வீட்ஹார்ட் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

யுவன் சங்கர் ராஜா தயாரித்து ரியோ ராஜ் நடித்த ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடி... மேலும் பார்க்க