உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
விழுப்புரம் - திருச்சி ரயில் வழித்தடத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்
சென்னை, ஏப். 8: விழுப்புரம் - திருச்சி இடையே ரயில் வேகத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரயில் பாதையாக விழுப்புரம் - திருச்சி வழித்தடம் விளங்குகிறது. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட முக்கிய அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில், விழுப்புரம் - திருச்சி இடையே பழைய பாலங்கள், அதிக வளைவுகள் காரணமாக ரயில்கள் மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் மட்டும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில்களை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கும் வகையில் மேம்படுத்தும் பணியை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
விழுப்புரம் - திருச்சி இடையே ரயில்கள் 110 கி.மீ. வேகத்துக்குள் இயக்கப்படுகிறது. எதிா்காலத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், விழுப்புரம் - திருச்சி இடையே தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், பழைய பாலங்களை மேம்படுத்துவது, வளைவுகளை நீக்குவது, பழைய ரயில் பாதைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகள் முடிந்துவிட்டால் சென்னை - திருச்சி மாா்க்கத்தில் அதிக வேகத்தில் ரயில்களை இயக்கலாம். இதனால் சென்னை - திருச்சி இடையே ரயில் பயண நேரம் சுமாா் 40 நிமிஷங்கள் வரை குறையும். இந்தப் பணிகளை நிகழ் நிதியாண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.