சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை
மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.
வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்தக் கோரி அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.
ரௌடி வெள்ளைக்காளி, என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, காவல்துறையினர் அவரிடம் விடியோகான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்த உத்தரவிடவும் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அண்மைக் காலமாக காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர். அண்மையில் எத்தனை என்கவுண்டர்கள் நடந்துள்ளன? காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை சுட்டுப்பிடியுங்கள். ஆனால், காலுக்குக் கீழே சுட்டுப்பிடியுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.