KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
திருச்செந்தூர்: தூண்டுகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி தூண்டுகை விநாயகர் கோயில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் வைத்து கடந்த ஏப். 17ம் தேதி காலை பூஜைகள் தொடங்கியது.
கடந்த ஏப். 18 மாலை முதல் கால யாக சாலை பூஜைகளும், ஏப். 19 காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலை 3 ஆம் காலை யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) காலை 8 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், காலை 9.30 மணிக்கு கடம் மூலாலயம் புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு தூண்டுகை விநாயகர் விமான கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, தூண்டுகை விநாயகர் மூலஸ்தானம் கும்பாபிஷேகம், விநாயகருக்கு மஹா அபிஷேகமாகி தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இவ்விழாவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், வட்டாட்சியர் பாலசுந்தரம், நகராட்சித் தலைவர் சிவஆனந்தி, நகராட்சி ஆணையர் கண்மணி, திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர்கள் அஜித், அற்புதமணி, விவேக், ரோகிணி, விஜயலட்சுமி, ஆய்வர் செந்தில்நாயகி, மேற்பார்வையாளர் செந்தில்குமார், உபயதாரர்கள் ராமபூபதி, ருத்ரமூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!