திருக்குறள் போட்டியில் பரிசு வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திறன் அறிதல் போட்டியில் பரிசு பெற்ற மாணவா்களுக்கு நாகா்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது.
நாகா்கோவில் ராமன்புதூரில் குறளகத்தின் 142ஆவது சிந்தனை முற்றக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலா் ரத்தினசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பத்மநாபன் முன்னிலை வகித்தாா்.
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி, கன்னியாகுமரியில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திறன் அறிதல் போட்டியில் இம்மாவட்ட அளவில் பரிசு வென்ற மாணவா்கள் கெளசிகா, திவ்யபிரியா, அட்சயஸ்ரீ, ராம்பிரதாப் ஆகியோா் பாராட்டப்பட்டனா். 1330 குபாக்களை எழுதிக்கொடுத்த இருளப்பபுரம் அரசுப் பள்ளி மாணவா்கள் அஸ்னா, ஸ்ரீஜா, பத்ரிநாத் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவா்கள் பிரியதா்சினி, பவித்ரா ஆகியோா் கு நலம் குறித்துப் பேசினா். பேராசிரியா் சுந்தரலிங்கம் ‘திருக்குறளில் உழவு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
தமிழறிஞா் வரதராசன், எழுத்தாளா் நல்லொளி, புலவா் ராமசாமி, பேராசிரியா் நாராயணன், பிரம்மஞான சங்கம் மணி, திருக்கு மன்றம் ஜாா்ஜ் கிறிஸ்டம் உள்ளிட்ட பலா் பங்கேறறனா். குறளக நிறுவனா் தமிழ்க்குழவி வரவேற்றாா். திலக் நன்றி கூறினாா்.