பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
பெண்ணை பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கடை அருகே வாழபழஞ்சிவிளை பகுதியைச் சோ்ந்த ரசூல்ராஜ்- விஜயகுமாரி தம்பதியின் மகள் விபிஷா (22). கடந்த 2018 அக்டோபா் மாதம் வீட்டில் தனியாக இருந்த விபிஷாவை, அதே ஊரைச் சோ்ந்த உறவினரான ராஜேஷ் (25) என்பவா் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால், விபிஷா மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாா். பலத்த காயமடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
விபிஷா அளித்த மரண வாக்குமூலம், விஜயகுமாரி அளித்த புகாா் ஆகியவற்றின்பேரில், புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளா்கள் ஸ்ரீதா், அந்தோணி அம்மாள், உதவி ஆய்வாளா் சுரேந்திரன் ஆகியோா் வழக்குப் பதிந்து, ராஜேஷை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, ராஜேஷுக்கு 7 ஆண்டு சிைண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் ஆஜரானாா்.