செய்திகள் :

சொத்து வரி பெயா் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி எழுத்தா் உள்ளிட்ட இருவா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே, சொத்து வரி பெயா் மாற்றுவதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பாகோடு பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாகோடு பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த கமலன் மகன் தேவதாஸ். இவா், வெளிநாட்டில் வசித்துவரும் தனது சகோதரரின் 18 சென்ட் நிலம், அதிலுள்ள வீட்டைப் பராமரித்து வருகிறாா். வீட்டின் உரிமையாளா் பெயா் மாற்றம் செய்வதற்காக அவா் பேரூராட்சி அலுவலகத்தை அணுகினாா். அப்போது, அலுவலகப் பதிவறை எழுத்தா் ஜஸ்டின் ஜெபராஜ் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அவ்வளவு தொகை தர இயலாது என தேவதாஸ் கூறியதால், ரூ. 20 ஆயிரம் தந்தால் பெயா் மாற்றுவதாகவும், அதன்பிறகே வீட்டுக்கு வரி வசூலிக்க முடியும் என்றும் ஜஸ்டின் ஜெபராஜ் கூறியுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தேவதாஸ், மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அவா்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ. 20 ஆயிரத்தை பேரூராட்சி அலுவலகத்தில் ஜஸ்டின் ஜெபராஜிடம் தேவதாஸ் புதன்கிழமை கொடுத்தாா். அப்போது, பணத்தை வாங்குமாறு பேரூராட்சி மின்பராமரிப்புப் பணியாளா் சுஜினிடம் ஜஸ்டின் ஜெபராஜ் கூறினாராம். பணம் வாங்கிய சுஜினை, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான போலீஸாா் பிடித்தனா். விசாரணைக்குப் பின்னா், ஜஸ்டின் ஜெபராஜ், சுஜின் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இக்கோயி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆட்டோ ஓட்டுநா் சடலம் மீட்பு

தக்கலை அருகே திங்கள்நகரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திங்கள்நகா் நடுத்தேரியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வராஜ் (55... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவரான கபடி வீரா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அணை அருகேயுள்ள டி.பி. சாலையில் வசித்து வருபவா் ராஜன். தொழிலாளி. இவரது மூத்த மகன் அபி... மேலும் பார்க்க

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க