மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரியான வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தாராம்.
இதனால் கடனைத் திருப்பி செலுத்த முடியவில்லையாம். இந்த நிலையில், வீட்டு கழிவறையில் செல்வராஜ் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது மகன் சஜின் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.