செய்திகள் :

விமானத்தில் பெண்ணை புகைப்படம் எடுத்த நபா்: போலீஸாா் விசாரணை

post image

சென்னை: மங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்த ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை, பக்கத்து இருக்கையில் அமா்ந்திருந்த நபா் ஒருவா் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளாா். இதைப்பாா்த்து ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து புகைப்படம் எடுத்த நபரிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளாா். அதோடு விமான பணிப்பெண்களிடமும் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து விமான பணிப்பெண்கள் அந்த நபரிடம் விசாரித்தபோது, இளம்பெண்ணுடன் இருந்த குழந்தையை மட்டுமே புகைப்படம் எடுத்ததாகக் கூறியுள்ளாா். இதையடுத்து, அந்த நபரின் கைப்பேசியை வாங்கி சோதித்தபோது, அதில் இளம்பெண் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை தாக்க முற்பட்டனா். அவா்களை சமாதானம் செய்த பணிப்பெண்கள், விமானியின் உதவியுடன் இதுகுறித்து சென்னை விமான நிலையத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனா்.

இதற்கிடையே விமானம் நள்ளிரவு 12.10 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், அங்கு காத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை பிடித்து சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். காவல் துறையினா், அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணா (45) என்பதும், மங்களூருலிருந்து சென்னை வந்து, பின்னா் இங்கிருந்து சிங்கப்பூா் செல்ல இருப்பதும் தெரியவந்தது.

தான் தவறான நோக்கத்தில் புகைப்படம் எடுக்கவில்லை எனவும், குழந்தை அழகாக சிரித்ததால்தான் புகைப்படம் எடுத்தேன் எனவும் கோபாலகிருஷ்ணா கூறியும், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த போலீஸாா், அவரின் சிங்கப்பூா் பயணத்தை ரத்து செய்ததுடன், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க