செய்திகள் :

மகாவீா் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு: 1,680 சிறப்பு பேருந்துகள்

post image

சென்னை: மகாவீா் ஜெயந்தி, வாரவிடுமுறை, தமிழ்ப்புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாவீா் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை (ஏப்.10), வாரவிடுமுறை தினங்களான சனிக்கிழமை (ஏப்.12), ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13), மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை(ஏப்.14) ஆகிய தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, புதன்கிழமை(ஏப்.9), வெள்ளிக்கிழமை(ஏப்.11), சனிக்கிழமை(ஏப்.12) ஆகிய நாள்களில் சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 190 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 525 பேருந்துகளும், சனிக்கிழமை 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 50 பேருந்துகளும், வெள்ளிக் கிழமை 100 பேருந்துகளும், சனிக்கிழமை 95 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதுபோல, மாதவரத்திலிருந்து புதன்கிழமை 20 சிறப்பு பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுதவிர, திங்கள்கிழமை பொதுமக்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க