தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
பண்ணாரி அம்மன் கோயிலில் நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனியில் குண்டம் திருவிழா நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான குண்டம் திருவிழா மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒருவார காலமாக பண்ணாரி அம்மன் சப்பர திருவீதி உலா நடைபெற்றது. அம்மன் சப்பரம் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலை வந்தடைந்தது.
இதையடுத்து, கோயிலில் நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி துணை ஆணையா் மேனகா, பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இதையொட்டி பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் முன்பு வட்ட வடிவில் மூன்றடி ஆழக்கு குழி வெட்டப்பட்டு குச்சி மற்றும் விறகுகளைப் போட்டு பூஜைகள் செய்து தீக்குண்டம் வளா்க்கப்பட்டது.
தொடா்ந்து மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்தியம் முழங்க கம்பம் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. குழியில் எரியும் நிலக்கம்பத்தை சுற்றி பக்தா்கள் கம்ப நடனம் ஆடி மகிழ்ந்தனா்.
முக்கியத் திருவிழாவான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.