செய்திகள் :

'மதுவுக்கு கூடுதலாக 10 ரூபாய்; குடும்பச்சூழலே காரணம்' - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர்

post image

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மதுரை மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் பாலுசாமி மற்றும் 10 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் பாலுசாமி, "தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைதான். டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையின் மூலம் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் விவகாரம் வரும் சட்டமன்றத்தேர்தலில் எதிர்கட்சிகளின் முக்கிய பிரசாரமாக இருக்கும்.

பேட்டி

தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 21 ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்கவில்லை. இதனால்தான் நெருக்கடியான குடும்பச்சூழல் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் மதுக்கடைகளில் மதுவிற்கு அதன் விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் வாங்குகிறார்கள். இந்த பத்து ரூபாய் குற்றச்சாட்டை ஒழிக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை வரவேற்கிறோம். அந்தத்திட்டத்தை அவுட்சோர்சிங் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தெரியவரும்பட்சத்தில் விற்பனையாளர் உள்பட சம்பந்தப்பட்ட கடையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களையும் சேர்த்து தண்டிக்கும் நடைமுறையை அரசு கொண்டுவர வேண்டும்.

கூட்டம்

இந்தியாவிலேயே பஞ்சாப் மாநிலத்திற்கு பின் தமிழகத்தில்தான் குடிப்பழக்கம் உடையவர்கள் அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை குறைத்துவிட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்காத கள்ளுக்கடைகளை அரசு திறக்க வேண்டும்.

மேலும் போதை மறுவாழ்வு மையம் தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். நீண்ட நாள் குடிப்பழக்கத்தில் உள்ளவர்களை உடனடியாக திருத்த முடியாது. ஆகவே உடலுக்கு தீங்கு விளைவிக்காத கள்ளு மற்றும் பதநீர் கடைகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும்" என்றார்.

இந்தியாவுக்கு 37% வரி... 'நண்பேன்டா...’வையெல்லாம் ஒதுக்கிவிட்டு, செயலில் இறங்குங்கள் மோடி!

உலகமே அச்சத்தோடு எதிர்பார்த்திருந்த ‘வர்த்தகப் போர்’, ஏப்ரல் 2 அன்று தொடங்கியேவிட்டது. இது, அமெரிக்காவின் பொருளாதார சுதந்திர நாள் என்று அறிவித்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார், அமெரிக்க அதிப... மேலும் பார்க்க

`தொகையை வசூலிக்காத BSNL; Jio-வால் மத்திய அரசுக்கு ரூ.1,757 கோடி நஷ்டம்’ - ஷாக் கொடுக்கும் சிஏஜி

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ.1,757.56 கோடி நஷ்டம் என்று சி.ஏ.ஜி (தலைமைக் கணக்குத் தணிக்கை) அறிக்கை கூறியுள்ளது. காரணம் என்ன? மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எ... மேலும் பார்க்க