பாளை.யில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய, மாநில, உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பு சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஓய்வூதியா்களை சம்பள குழுவுக்கு முன்பின் என்று பிரித்து மக்களவையில் மசோதா நிறைவேற்றிய பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டிப்பது; மத்திய அரசு ஊழியா்களுக்கு எட்டாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய உயா்வு அளிக்கப்படும்போது, ஓய்வூதியதாரா்களுக்கும் அதே போல வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் சீத்தாராமன் தலைமை வகித்தாா். கே. சண்முகசுந்தர்ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். முத்துசாமி, ராம்குமாா், கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். சங்கரநாராயணன் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.