மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
பாளையங்கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 31ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலையில் 6 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து, அருள்மிகு பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி, சண்முகா் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
