செய்திகள் :

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

post image

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்துவதற்காக குழு ஒன்று கடந்த நவம்பர் 24 அன்று சென்றது.

அப்போது, ஏற்பட்ட கலவரத்தில் 4 பேர் பலியாகி பலர் காயமடைந்தனர்.

இதனால், அங்கு ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், மசூதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மசூதியில் நிறுவுவதற்காக தொல்லியல் துறை சார்பில் அனுப்பப்பட்ட புதிய பெயர்ப்பலகையில் ’ஜாமா மசூதி’ என்ற பெயருக்கு பதிலாக ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீல நிறத்தில் இருக்கும் இந்திய தொல்லியல் துறை அனுப்பிய பெயர்ப்பலகை சத்யவ்ராத் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள புதிய பெயர்ப்பலகை விரைவில் அங்கு பொருத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய தொல்லியல் துறை அதிகாரி விஷ்ணு சர்மா, “மசூதியின் முன்பு தொல்லியல் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பழைய பெயர்ப்பலகை நீக்கப்பட்டு ‘ஷாஹி ஜாமா மசூதி’ என்ற பெயர்ப்பலகையை மர்ம நபர்கள் முன்னர் வைத்தனர்.

இந்திய தொல்லியல் துறையின் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடியே ‘ஜும்மா மசூதி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மசூதி வளாகத்தினுள் இதே பெயரில் மற்றொரு பெயர்ப்பலகை ஏற்கனவே உள்ளது” என்று தெரிவித்தார்.

பெயர்ப்பலகை எப்போது நிறுவப்படும் என்ற தகவலை தொல்லியல் துறையினர் தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க | ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக, பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறியதாவது: கோ... மேலும் பார்க்க

35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை

அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது. இம்மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ‘ஏடிஎம்’ (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே சாா்பில் மகாராஷ்டிரத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முறையில்... மேலும் பார்க்க

நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பாா்வையிட்ட முதல்வா், மத்திய அமைச்சா்

ஜனாசு: உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று அஸ்வினி ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் - பாஜகவை காங்கிரஸ் மட்டுமே வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி

மொடாசா: கொள்கைரீதியான போராட்டத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வல... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்

பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ... மேலும் பார்க்க