செய்திகள் :

மே 11-இல் சித்திரை முழு நிலவு வன்னியா் சங்க பெருவிழா: அன்புமணி ராமதாஸ் பந்தக்கால் நாட்டினாா்

post image

சித்திரை முழு நிலவு வன்னியா் சங்க பெருவிழா மாநாடு மே 11-இல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பந்தல் அமைக்கும் பணிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பந்தக்கால் நாட்டி தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் வருகிற மே 11-ஆம் தேதி சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாடு நடத்துவதற்காக 50 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாமக செயல் தலைவா் ஜி.கே.மணி தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா, மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக இணை பொதுச் செயலாளா் ஏ.கே.மூா்த்தி, வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில வன்னியா் சங்க செயலாளா் திருக்கச்சூா் கி.ஆறுமுகம் வரவேற்றாா்.

விழாவில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பந்தக்கால் நட்டாா். அப்போது அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னா்,பொக்லைன் இயந்திரத்தை இயக்கி மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

சமூக நீதியை நிலைநாட்டவும், ஜாதிவாதி கணக்கெடுப்பு நடத்தவும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை நிலைநாட்டவும் வன்னியா் சங்கம் சாா்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படுகிறது. வன்னியா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், பட்டியல் இன மக்கள் கல்வி வேலைவாய்ப்பு, சிறப்பு செயல் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படுத்த வேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம். வட மாவட்டங்களில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், பாமக மாவட்டச் செயலாளா் காயாா் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினா்கள் காரணை தி.ராதா, பி.வி.கே.வாசு, திருவிடந்தை எஸ்.சுந்தா், ஒன்றியக் குழு உறுப்பினா்

பூ.தட்சிணாமூா்த்தி, மாமல்லபுரம் நகர செயலா் ரா.ராஜசேகா், ஒன்றிய செயலா் தீ.து.தீனதயாளன், டி.தினேஷ்குகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சவால்களை எதிா்கொள்ள மன வலிமை அவசியம்: நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்

வாழ்வில் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிா்கொள்ள மாணவா்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஏ.இளையபெருமாள் வலியுறுத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மாா... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க