படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
தனிமையில் நெருக்கம்... வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்கும்படி மிரட்டிய டாக்சி டிரைவரை கொன்ற காதல் ஜோடி
பஞ்சாப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை தேடி மும்பை வந்திருக்கிறார். அவர் நவிமும்பை உல்வே பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். கம்பெனிக்கு செல்ல சுரேந்திர பாண்டே என்பவரின் ஓலா டாக்சியை பயன்படுத்தி வந்தார். எனினும் அவர் நிரந்தரமாக தங்குவதற்கு உடனே வீடு கிடைக்கவில்லை. இது குறித்து சுரேந்திர பாண்டேயிடம் அப்பெண் பேசினார். இதையடுத்து சுரேந்திர பாண்டே தனது வீட்டில் தங்க இடம் கொடுப்பதாக தெரிவித்தார்.
சுரேந்திர பாண்டே தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து அப்பெண்ணுக்கு தனது வீட்டில் தங்க இடம் கொடுத்தார். இதனிடையே, அப்பெண் வீட்டில் இருந்தபோது அவரின் காதலன் விஷால் என்பவர் வந்தார். அங்கு இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தனர். அவர்கள் தனிமையில் இருந்ததை பார்த்த, பாண்டே தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். அதன் பிறகு வீடியோவை காட்டி மிரட்டி தனது ஆசைக்கு இணங்கும்படி அப்பெண்ணை பாண்டே மிரட்டி உள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இத்தகராறு முற்றிய நிலையில், அப்பெண் காதலன் என இருவரும் சேர்ந்து பாண்டேயை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இருவரும் விஷாலின் சொந்த ஊரான சங்கம்னாருக்கு தப்பிச்சென்றனர்.
அங்கு அவர்கள் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறினர். இதையடுத்து உறவினர்கள் இருவரிடமும் சொல்லி போலீஸில் சரணடையும்படி கேட்டுக்கொண்டனர். அதன் படி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் உண்மையை சொல்லி சரணடைந்தனர். இதையடுத்து நவிமும்பை போலீஸாருக்கு இது குறித்து சங்கம்னார் போலீஸார் தகவல் கொடுத்தனர். நவிமும்பை போலீஸார் பாண்டேயின் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.