Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
மாவட்ட அதிமுக பாக முகவா் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், வளா்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அதிமுக செயலா் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக இலக்கிய அணி செயலரும், மாவட்ட பொறுப்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு, பூத் கமிட்டி உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவினா் பணிகள் குறித்தும் பேசினாா். கூட்டத்தில் அமைப்புச் செயலா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ உறுப்பினா் பழனி, மாவட்ட துணைச் செயலா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய வைகைச்செல்வன், பொது எதிரியை வீழ்த்தவும், மக்களின் எண்ணங்களை அறிந்தும்தான் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. சமரசம் செய்து கொள்ள கூட்டணி அமைக்கவில்லை. இது தோ்தலுக்கான கூட்டணி மட்டுமே என்றாா்.