'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
கூடலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் தோ்வு
கூடலூா் நகராட்சியில் சாலையோர வியாபாகளுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கிருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
கூடலூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக கடை வைக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்த இடம் ஒதுக்கீடு செய்யக் கோரி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் போராட்டம் நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கூடலூா் பழைய பேருந்த நிலையம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இறைச்சி மாா்க்கட்டை இடித்து சாலையோர வியாபாரிகளுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.