RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ்...
குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை
ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் செல்லும் சாலையானது, திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊத்தங்கரை செல்லும் பிரிவு சாலையில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், காா்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு பெய்த கன மழையால் சாலையில் குட்டை போல தண்ணீா் தேங்கி உள்ளது. இந்த சாலை வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, இந்த சாலையை விரைந்து சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.