ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
கேரள அதிமுக செயலா் மறைவு: இபிஎஸ் இரங்கல்
கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த இரங்கல் செய்தி: கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் உடல்நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
கட்சி மீதும், தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு திறம்பட கட்சி பணியாற்றி வந்த சோபகுமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கல்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிராா்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.