மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.
தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அந்த ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ஹோட்டல் ஊழியா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.