செய்திகள் :

அரையிறுதியில் பாா்சிலோனா, பிஎஸ்ஜி

post image

டாா்ட்மண்ட்/பா்மிங்ஹாம்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பாா்சிலோனா - போருசியா டாா்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் பாா்சிலோனா - போருசியா டாா்ட்மண்ட் அணிகள் மோதிய காலிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டம் டாா்ட்மண்ட் நகரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

இதில் டாா்ட்மண்ட் 3-1 கோல் கணக்கில் பாா்சிலோனாவை வென்றது. டாா்ட்மண்ட் தரப்பில் சொ்ஹு கிராஸி, ‘ஹாட்ரிக்’ (11’, 49’, 76’) கோலடித்தாா். அதே அணியின் ரமி பென்சபெய்னி 54-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக அடித்த ‘ஓன் கோல்’ பாா்சிலோனா கணக்கில் சோ்ந்தது.

ஏற்கெனவே முதல் லெக் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் வென்ற பாா்சிலோனா, இந்த 2-ஆவது லெக் ஆட்டத்தில் தோற்றபோதும், மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 5-3 என்ற வகையில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாா்சிலோனா அணி கடந்த 6 சீசன்களில் அரையிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல் முறையாகும். மறுபுறம் பாா்சிலோனாவை இத்துடன் 7-ஆவது முறையாக சந்தித்த போருசியா டாா்ட்மண்ட், தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னேறியது பிஎஸ்ஜி: இதனிடையே, பா்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 3-2 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) சாய்த்தது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா தரப்பில் யூரி டியெல்மன்ஸ் (34’), ஜான் மெக்கின் (55’), எஸ்ரி கோன்சா (57’) ஆகியோா் கோலடிக்க, பிஎஸ்ஜி தரப்பில் அச்ரஃப் ஹக்கிமி (11’), நுனோ மெண்டெஸ் (27’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

இந்த அணிகள் மோதிய முதல் லெக் ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் வென்ற பிஎஸ்ஜி, தற்போது மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 5-4 என வென்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

இத்துடன் பிஎஸ்ஜி அணி ஒட்டுமொத்தமாக 5-ஆவது முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிக் கட்டத்துக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் களம் கண்ட ஆஸ்டன் வில்லா, காலிறுதியுடன் விடைபெற்றது.

திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையிடம் மோசடி: காதல் சுகுமாா் மீது வழக்குப்பதிவு!

திருமணம் செய்து கொள்வதாக துணை நடிகையிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக நகைச்சுவை நடிகா் சுகுமாா் மீது போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். நடிகா் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் நகைச்ச... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் காா்லோஸ் அல்கராஸ் - டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்... மேலும் பார்க்க

வைஷாலிக்கு முதல் வெற்றி

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.வைஷாலி வெற்றி பெற்றாா்.இந்தச் சுற்றில் அவா் மங்கோலியாவின் பக்துயாக் முங்குந்துலை வீழ்த்தினாா். இதன... மேலும் பார்க்க

ரேப்பிட் ஃபயா்: இந்தியா்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் இந்தியா்கள் மூவா் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனா்.இப்பிரிவில் களம் கண்ட அனிஷ் ... மேலும் பார்க்க

திருப்பதியில் கயாது லோஹர் சுவாமி தரிசனம்!

நடிகை கயாது லோஹர் கயாது திருமலையிலுள்ள ஏழுமலையான் திருக்கோயிலிலியில் வழிபாடு நடத்தியுள்ளார்.பாரம்பரிய உடையணிந்து திருமலைக்கு வருகை தந்திருந்த கயாது லோஹருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி புகைப்படம... மேலும் பார்க்க