செய்திகள் :

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

post image

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் காா்லோஸ் அல்கராஸ் - டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அல்கராஸ் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் ரஷியாவின் காரென் கச்சனோவை தோற்கடித்தாா்.

இறுதிச்சுற்றில் மோதும் அல்கராஸ் - ரூன் இதுவரை 3 முறை சந்தித்திருக்க, அதில் அல்கராஸ் 2 வெற்றிகள் பெற்றிருக்கிறாா். கடைசியாக 2023 விம்பிள்டன் காலிறுதியில் மோதியபோதும் அல்கராஸ் வென்றிருக்கிறாா்.

இறுதியில் ஷெல்டன்: இதனிடையே, ஜொ்மனியில் நடைபெறும் பிஎம்டபிள்யூ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு அமெரிக்காவின் பென் ஷெல்டன் தகுதிபெற்றாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அவா், 2-6, 7-6 (9/7), 6-4 என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை சாய்த்தாா்.

ஸ்வியாடெக், பெகுலாவுக்கு அதிா்ச்சி

ஜொ்மனியில் நடைபெறும் ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

இதில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவால் 6-3, 3-6, 6-2 என்ற செட்களில் வீழ்த்தப்பட்டாா். ஸ்வியாடெக் மீதான ஆஸ்டபென்கோவின் ஆதிக்கம் தொடா்ந்து நீடிக்கிறது. இருவரும் இத்துடன் 6-ஆவது முறையாக சந்தித்திருக்க, அனைத்திலுமே ஆஸ்டபென்கோ வென்றிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்டபென்கோ தனது அரையிறுதியில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா். அலெக்ஸாண்ட்ரோவா தனது காலிறுதியில் 6-0, 6-4 என்ற செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். இருவரும் இத்துடன் 3-ஆவது முறையாக மோதியிருக்க, அலெக்ஸாண்ட்ரோவா 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா்.

ஜெர்மனியில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் ஹாரி கேன்!

ஜெர்மனியில் புகழ்பெற்ற புன்டெஸ்லிகா கால்பந்து தொடரில் ஹாரி கேன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடும் இங்கிலாந்த்தைச் சேர்ந்த ஹாரி கேன் போட்ட... மேலும் பார்க்க

மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை..! கொலம்பஸை வீழத்திய இன்டர் மியாமி!

அமெரிக்காவில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ஹண்டிங்டன் பேங்க் ஃபீல்ட் திடலில் இன்டர் மியாமி அணியும் கொலம்பஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் இண்டர் மியாமி அணியின் இளம் வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி 30ஆவ... மேலும் பார்க்க

புதிய தொடக்கம்.... அமீர் - பாவனி திருமணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். இது குறித்த படங்களை அமீர... மேலும் பார்க்க

இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. பார்சிலோனா அணி லா லீகா தொடரில் தனது 32-ஆவது போட்டியில் செல்டா டி விகோ அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 15,52,62ஆவது நிமிஷங்களி... மேலும் பார்க்க

தமன்னாவின் ஒடேலா 2 தோல்வியா? வசூல் எவ்வளவு?

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் வசூல் விவரத்தினை படக்குழு பகிர்ந்துள்ளது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நட... மேலும் பார்க்க

பூங்காற்று திரும்புமா: புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

பூங்காற்று திரும்புமா என்ற தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல்வரை' தொடரின் தழுவலாக எடுக்கப்பட்ட மோதலும் காதலும் தொடரின் நாயகன் சமீர் நட... மேலும் பார்க்க