படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
'6 அடி' - தெலங்கனாவின் உயரமான நடத்துனர்; வைரலான புகைப்படம்! - அரசு எடுத்த உடனடி நடவடிக்கை
பெரும்பாலும் தனக்குள்ள கஷ்டங்கள் தீர சரியாக வேலைக்கு செல்வார்கள்... ஆனால், தெலங்கானாவை சேர்ந்த ஒருவருக்கு வேலையே கஷ்டமாக மாறியுள்ளது.
'இப்போ எல்லாருக்கும் அப்படி தான்... வேலையே கஷ்டம் தான்' என்பது தானே உங்கள் மைண்ட் வாய்ஸ். இவரது விஷயத்தில் சம்பவமே வேறு.
தெலுங்கானாவைச் சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது உயரம் 6 அடி 4 இன்ச் ஆகும்.
2021-ம் ஆண்டு, இவரது தந்தை உயிரிழந்தப் பிறகு, வாரிசு கோட்டாவில் இவரது தந்தையின் பேருந்து நடத்துனர் வேலை இவருக்கு கிடைத்துள்ளது.

இவரது உயரத்தால் இவர் குனிந்துகொண்டே தான் வேலை பார்க்க வேண்டியதாக ஆகியுள்ளது.
ஒரு நாளைக்கு இவர் ஐந்து டிரிப் அடிக்கிறார் மற்றும் அதன் பணி நேரம் 10 மணி நேரம் ஆகும்.
இதனால், இவருக்கு தூக்கமின்மை, முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்பட்டிருக்கிறது.
தெலங்கானா அரசின் நடவடிக்கை
இந்த நிலையில், இவர் பேருந்தில் பணிபுரியும் போட்டோ வைரலாக, தெலங்கானா அரசு தகுந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தெலங்கனா போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் இவருக்கு பேருந்து நடத்துநர் பணி அல்லாமல் போக்குவரத்து துறையை சேர்ந்த வேறு பணியை தருவதாக கூறியுள்ளார்.