செய்திகள் :

``உடனடியாக ஆளுநர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்" - கொதிக்கும் வைகோ

post image

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து வந்த மோதல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆளுநரின் செயல்பாடுகள் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.

ஆளுநர் ரவி | உச்ச நீதிமன்றம்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததின் மூலம் சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்ய ஆளுநர் தடுக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார்.

இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைத் தமிழக ஆளுநர் நிறைவேற்றவில்லை. மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தாமதிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநரின் இத்தகைய செயல் சட்டப்படி தவறு.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததின் மூலம் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். ஆளுநரின் இத்தகைய செயல் தன்னிச்சையானது மற்றும் அர்த்தமற்ற செயல் ஆகும். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் எதிரி போல் செயல்படுகிறார்.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வைகோ
வைகோ

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.

குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பிவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம் , இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்றும், ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது என்றும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை, ஆளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரங்கள் இல்லை, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ஆளுநர் ரவி

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர் என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம்!

'தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது' என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டிட்யூட். இவர் இஸ்ரேல் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் யாரும் குரல் கொடுக்கக்கூடா... மேலும் பார்க்க

`டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது' -எடப்பாடி

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று (ஏப்ரல் 16) வெளிநடப்பு செய்திருக்கின்றனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியை திமுக விமர... மேலும் பார்க்க

சீனா: `இந்திய நண்பர்களே!' அமெரிக்கா உடன் பகை; இந்தியாவை அணைக்கும் சீனா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு மறைமுக போர் இருந்துகொண்டே இருந்து வந்தது. 'பரஸ்பர வரி' விதிப்பிற்கு பிறகு இது வெட்ட வெளிச்சம் ஆனது. பரஸ்பர வரிக்கு எதிர்ப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென முளைக்கும் ஞானப்பல்; புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதா?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் அம்மாவுக்கு வாய்ப் புற்றுநோய் வந்து பல வருடங்களாக சிகிச்சையில் இருக்கிறார். மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்ப்புற்றுநோய் பாதித்திருக்கிறது. ஞானப்பல் குத்திக்குத்திபுண்... மேலும் பார்க்க

`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ஜாக்பாட்!

அமெரிக்காவில் ஆவணம் செய்யப்படாமல் குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்றுவது வழக்கம் தான். இது 2009-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது தான் உலகம் முழுவதும் கடு... மேலும் பார்க்க