படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
‘நம்பவே முடியாத கதை..’ அட்லியைப் பாராட்டிய லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர்!
இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் கதை குறித்து லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்தினர் ஆச்சரிப்பட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர்.
ரூ. 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு விடியோவில், அமெரிக்காவின் பிரபல விஎஃப்எக்ஸ் நிறுவனங்களான லோலா விஎஃப்எக்ஸ் (LOLA vfx), ஸ்பெக்ட்ரல் மோஷன் (Spectrel motion) மற்றும் லேகசி எஃபெகட்ஸ் (Legacy effects) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அட்லியும் அல்லு அர்ஜுனும் இணைந்து சென்று படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது.

அதில், படத்தின் கதை குறித்து ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட அவெஞ்சர்ஸ் படத்தின் விஎஃப்எக்ஸ் கலைஞரான மைக் எலிசல்டே, “இதுவரை நான் இப்படியொரு கதையைக் கேட்டதில்லை. நான் உருவாக்க நினைத்தது இப்படிப்பட்ட ஒரு விஷயத்தைத்தான்’ எனத் தெரித்துள்ளார்.
அதேபோல், லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர், “நம்பவே முடியாத கதை’ என அட்லியைப் பாராட்டியுள்ளார்.
இதனால், படப்படிப்பு துவங்குவதற்கு முன்பே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் இப்படம் வசூல் சாதனைகளைச் செய்யலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜப்பானில் மாநாடு!