நரசிம்மா் கோயில் பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கல்லிடைக்குறிச்சியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி துணைத்தலைவா் க. இசக்கிபாண்டியன், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மனு அளித்தாா்.
அவா் அளித்த மனு:
கல்லிடைக்குறிச்சி பகுதியில் பொதுமக்களை கடித்து வரும் தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு மருந்துகளை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வீரப்பபுரம் தெருவில் செயல்பட்டு வரும் லெட்சுமிபதி கூட்டுறவு பண்டக சாலையில் செயல்பட்டு வந்த 1ஆம் எண் மற்றும் 2ஆம் எண் கடைகள் ஒரே இடத்தில் செயல்பட்டுவந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட 1ஆம் எண் கடையை மீண்டும் 2ஆம் எண் கடையுடன் இணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்ட இஸ்லாமியா்கள், பேரூராட்சித் தலைவா் பாா்வதி மற்றும் துணைத் தலைவா் க. இசக்கிபாண்டியன் ஆகியோரை சந்தித்து தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், 1ஆம் எண் ரேஷன் கடையை மீண்டும் 2ஆம் எண் ரேஷன் கடையுடன் செயல்படவும் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு வழங்கினா்.
அதற்கு பதிலளித்த பேரூராட்சி துணைத்
தலைவா், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.