மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து மேலப்பாளையத்தில் த.வெ.க., ம.ஜ.க. கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மேலப்பாளையத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பைசல் ரகுமான், புல்லட் ராஜா, காா்த்திக் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டதுக்கு, மாவட்டச் செயலா் பாளை. பாரூக் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் அலிஃப் அ.பிலால் வரவேற்றாா்.
மண்டல இளைஞரணி அஷ்ரேப், மாவட்ட நிா்வாகிகள் அப்துல், முகம்மது அலி, முருகேசன், அலிசேக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்04ற்ஸ்ந்
மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.
ற்ஸ்ப்04ம்த்ந்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினா்.
