பேரிடர் நிவாரண நிதி! தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி ஒதுக்கீடு
ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது!
கேரளம் சென்ற ரயிலில் ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒடிசாவைச் சேர்ந்த தம்பதியர், பணிநிமித்தம் காரணமாக ஒருவயது குழந்தையுடன் கேரளத்தில் உள்ள அலுவா நகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் குழந்தையுடன் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் தூங்கிய நேரத்தில், குழந்தையைக் கடத்திச் செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒலவக்கோடு ரயில் நிலையத்தில் இறங்கினார். இருப்பினும், குழந்தையின் அழுகையையும், கடத்திச் சென்றவரின் நடவடிக்கையையும் கண்ட அப்பகுதியில் இருந்தவர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் கடத்திச் சென்றவரிடம் விசாரித்தனர்.
இதனையடுத்து, அவர் ஏறுக்குமாறாய் பதிலளித்ததால், சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை அவர் கடத்தியிருப்பது தெரிய வந்தது.
இதனிடையே, தாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை காணாமல் போய்விட்டதாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் திருச்சூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையைக் கடத்திச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிக்க:ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்