புதுச்சேரி- திருப்பதி இடையே ரயில்கள் ரத்து!
புதுச்சேரி-திருப்பதி இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புதுச்சேரி-திருப்பதி இடையே இன்று மதியம் 3 மணி இயக்கப்படும் ரயிலும், நாளை காலை 4 மணிக்கு இயக்கப்படவிருந்த ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.